அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் தருகிறது: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் 

அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். 
அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் தருகிறது: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் 
Published on
Updated on
1 min read

அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். 
மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மத்திகிரி எனும் இடத்தில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பண்ணையை இன்று நேரில் பார்வையிட்டார். 
தொடர்ந்து பண்ணையில் உள்ள கால்நடைகள், அதற்கான உணவுப் பயிர்கள், மருத்துவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட ஆகியவை குறித்து அமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் காங்கேயம் வகை உள்ளிட்ட உயர் வகை காளைகள் வளர்க்கும் மையத்தை பார்வையிட்டு அங்குள்ள கால்நடைகள் வளர்ப்பு முறைகள், இன பெருக்கம், விந்து உற்பத்தி மற்றும் உறை விந்து வங்கி, குளிர் பதன சேமிப்பு ஆகிய மையங்களை பார்வையிட்டார். 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இணையமைச்சர் டாக்டர் எல். முருகன், மத்திய அரசின் 8 ஆண்டு சாதனைகள் இந்தியா முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவதாகவும், அதே நேரத்தில் பயனாளிகளுக்கு இடைத் தரகர்கள் இன்றி டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வழியாக அரசின் திட்டங்கள் மக்களை சென்று சேர்ந்துள்ளன. 

ஏழைமக்கள் பயன்பெறும்வகையில், ஜன் தன் வங்கிக் கணக்கு, விவசாயிகள் கெளரவ நிதி, இலவச எரிவாயு இணைப்பு, சுகாதாரமான குடிநீர், கழிப்பிடங்கள், 5 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு உள்பட பல்வேறு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நாட்டில் கப்பல் போக்குவரத்து, விண்வெளி என அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. 
2014 ஆம் ஆண்டுக்கு பிறகுதான் மீன் வளத்துறைக்கு ஒரு தனி அமைச்சகமே உருவாக்கப்பட்டது. கடந்த 70 வருடமாக மீன்வளத் துறைக்கு மொத்தம் ரூ. 4 ஆயிரம் கோடி மட்டுமே ஒதுக்கி வந்துள்ள நிலையில், 2015 ஆம் ஆண்டில் இருந்து 2022 ஆம் ஆண்டு வரை  கிட்டத்தட்ட ரூ. 32 ஆயிரம் கோடி இந்தத் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை காசிமேடு துறைமுகம் உலக அளவில் நவீனப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. 
75வது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், 100 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தில் நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற உலக அளவில் ஒரு வல்லமை மிக்க திட்டத்துடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. முன்னதாக நாமக்கலில் நடந்த நிகழ்வில், மத்திய அரசின் 8 ஆண்டு சாதனைகளை விளக்கும் கையேட்டை மத்திய இணையமைச்சர் எல். முருகன் வெளியிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com