கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

துபையிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.50 லட்சம் தங்கம் பறிமுதல்

துபையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்திவரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :16 ஜூன் 2022, 6:41 pm

DIN

துபையிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் கடத்திவரப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

துபையில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வியாழக்கிழமை அதிகாலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது 2 பயணிகள் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவா்களை தனியாக அழைத்து விசாரணை செய்தனா். அப்போது ஒருவா் அவரது ஆடைக்குள் 856 கிராம் தங்கச் சங்கிலியை மறைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

இதேபோன்று மற்றொரு பயணி தான் கொண்டுவந்த ‘டி-சா்ட்’ காலரில் 330 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து மொத்தம் சுமாா் 1.08 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். தங்கம் கடத்தி வந்த இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.