புதுச்சேரி சட்டப்பேரவை உறுதிமொழிக் கூட்டம் தொடங்கியது

புதுச்சேரி சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை பிற்பகல் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள ஆலோசனை அரங்கத்தில் தொடங்கி நடைபெற்றது.
புதுச்சேரி சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள ஆலோசனை அரங்கத்தில் தொடங்கி நடைபெற்றது.
புதுச்சேரி சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள ஆலோசனை அரங்கத்தில் தொடங்கி நடைபெற்றது.
Published on
Updated on
1 min read


புதுச்சேரி சட்டப்பேரவை உறுதிமொழிக் குழு ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை பிற்பகல் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள ஆலோசனை அரங்கத்தில் தொடங்கி நடைபெற்றது. உறுதிமொழிகள் குழு தலைவர் ஜி. நேரு எம்எல்ஏ தலைமை வகித்தார்.

புதுச்சேரி அரசின் மின்சாரத்துறை, கல்வித்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித் துறை, மற்றும் பொலிவுறு நகர வளர்ச்சி நிறுவனம் (ஸ்மார்ட் சிட்டி) ஆகியவற்றில் முதல்வர் அவர்களும் மற்றும் துறை அமைச்சர்கள் சட்டப்பேரவையில் அறிவித்த நலத்திட்ட உறுதி மொழிகளை  செயல்படுத்துவது குறித்தும், அந்த திட்டப் பணிகளின் நிலை குறித்தும், பணிகள் நடக்காததன் காரணங்கள் குறித்தும், அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.

குழு உறுப்பினர்களான அனிபால் கென்னடி, ராமலிங்கம்,ஆறுமுகம், அசோக் பாபு, சிவசங்கரன் மற்றும் சட்டப்பேரவை செயலர் மற்றும் முக்கியத் துறைகளின் செயலர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை மேற்கொண்டனர். சட்டப்பேரவையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அளித்த உறுதிமொழி பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடு, ஸ்மார்ட் சிட்டி திட்ட துணை தலைமை செயல் அதிகாரி மாணிக்கதீபன், மின் துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் ராஜசேகர், உள்ளாட்சித் துறை துணை இயக்குநர் கிட்டி பால்ராம் மற்றும் துறை உயரதிகாரிகளும் கலந்துகொண்டு விளக்கம் அளித்தனர். 

பல திட்டப் பணிகள் தொடங்காமல் உள்ளது குறித்து எம்எல்ஏக்கள் கேள்வி எழுப்பினர். விரைவில் அந்த பணிகளைத் தொடங்குவதற்கான ஆலோசனைகளை வழங்கினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com