அதிமுக தற்போது கேப்டன் இல்லாத படகு போன்று சென்று கொண்டிருப்பதாக தகவல் தொழில்நுட்பத் துறை மனோ தங்கராஜ் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், அதிமுக தற்போது கேப்டன் இல்லாத படகு போன்று சென்று கொண்டிருக்கிறது. கொள்கையும் இல்லை! கோட்பாடும் இல்லை! தலைமையும் இல்லை, என்ற நிலையில் உள்ளது.
தமிழ்நாடு திராவிட மண் இங்கு பாஜகவிற்கு இடமில்லை, பாஜகவை நம்பி செல்கிறவர்கள் மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு சமம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்றைத் தலைமை விவகாரம் தொடா்பாக அதிமுகவில் பிரச்னை எழுந்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுடன் அண்மையில் கூடிய அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சலசலப்புடன் அரை மணி நேரத்தில் நிறைவு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.