92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கோவையில் ஜவுளி இயந்திரங்கள் கண்காட்சி தொடக்கம்: மத்திய அமைச்சர் தொடங்கி வைத்தார்

கோவையில் சா்வதேச ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் கண்காட்சியான சைமா டெக்ஸ்ஃபோ் 2022 இன்று தொடங்கியது. 

News image
Updated On :25 ஜூன் 2022, 11:40 am

DIN

கோவையில் சா்வதேச ஜவுளி இயந்திரங்கள், உதிரிபாகங்கள் கண்காட்சியான சைமா டெக்ஸ்ஃபோ் 2022 இன்று தொடங்கியது. 

கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் 27 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த கண்காட்சியில், வெளிநாடுகள், நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த நிறுவனங்கள் 295 அரங்குகளில் தங்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

கண்காட்சியை ஜவுளித் துறை அமைச்சா் பியூஸ் கோயல் தொடங்கிவைத்தார். கண்காட்சியை ஜவுளித் துறை அமைச்சா் பியூஸ் கோயல் வெள்ளிக்கிழமை பிற்பகலில் தொடங்கிவைப்பதாக முன்னா் அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் மத்திய அமைச்சரின் பயணத் திட்டம் ஒரு நாள் ஒத்திவைக்கப்பட்டதால் கண்காட்சி இன்று தொடங்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.