லோயர் கேம்ப்பில் மின் உற்பத்தி அதிகரிப்பு

தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில், மின்சார உற்பத்தி ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து உற்பத்தி செய்யப்பட்டது.
லோயர் கேம்ப்பில் மின் உற்பத்தி அதிகரிப்பு
Published on
Updated on
1 min read


கம்பம் : தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில், மின்சார உற்பத்தி ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து உற்பத்தி செய்யப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 129.25 அடி உயரமாகவும், (மொத்த உயரம் 142 அடி), அணைக்குள் நீர் இருப்பு, 4,536 மில்லியன் கன அடியாகவும், நீர் வரத்து விநாடிக்கு , 410 கன அடியாகவும், அணையிலிருந்து தண்ணீர் தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு, 800 கன அடியாகவும் திறந்து விடப்பட்டது.

இதன் எதிரொலியாக லோயர்கேம்ப்பில் இரண்டு மின்னாக்கிகளில்,  72 மெகாவாட் (முதல் அலகில் 42, இரண்டாவது அலகில் 30 மெகாவாட்) மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை காரணமாக அணையின் நீர்பிடிப்பு பகுதியான பெரியாறு அணை பகுதியில், 3.8 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில், 6.8 மி.மீ., மழையும் பெய்த

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X