
வேலூர் ஊரீசுப்பள்ளியில் தலைமுடியை ஸ்டைலாக வெட்டி வந்த புள்ளிங்கோக்களுக்கு - தலைமுடியை சீர்திருத்தி ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.
வேலூர்மாவட்டம், வேலூரில் உள்ள 160 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஊரீசுப்பள்ளி. இப்பள்ளியில் மாணவர்கள் பலரும் தலைமுடியை சரியாக வெட்டி வருவதில்லை எனவும், மேலும் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்கள் ஒழுக்கமாக சீருடை அணிந்து தலைமுடியை வெட்டியிருக்க வேண்டுமென்ற மாவட்ட ஆட்சியரின் சுற்றறிக்கையின் படி, மாணவர்கள் பெரும்பாலானோர் தலைமுடியை சரியாக வெட்டாமல் பல புள்ளிங்கோ கட்டிங்க், ஸ்பைக் கட்டிங்க் என விதவிதமான ஸ்டைல்களில் முடியை வெட்டிவந்தனர்.
முடியை வெட்டாமலும், விதவிதமான ஸ்டைலில் முடியை வெட்டி வந்த மாணவர்கள் 65 பேரை கண்டறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் எபினேசர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அவர்களை எச்சரித்து அறிவுரை வழங்கினர்.
பின்னர், தலைமை ஆசிரியர் எபினேசர் தனது சொந்த செலவில் முடிதிருத்துபவர்களை பள்ளிக்கு வரவழைத்து ஸ்டைலாக தலைமுடியை வெட்டியிருந்த மாணவர்களின் தலைமுடியை சீர்திருத்தனர்.
இதையும் படிக்க | மணப்பாறை நகராட்சி நகர்மன்ற தலைவர் பதவியை ராஜிநாமா செய்தார் அதிமுக கவுன்சிலர்!
இதுகுறித்து தலைமை ஆசிரியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மாணவர்கள் தலைமுடியை சரியாக வெட்டாமல் வந்துள்ளனர். ஒழுக்கமாக மாணவர்கள் இருக்க வேண்டும். ஒழுங்காக தலைமுடியை வெட்ட வேண்டும் என அறிவுரையை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி அவர்களின் தலைமுடியை சீர்திருத்தினோம். இதுகுறித்து அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து அவர்களுக்கும் அறிவுரை வழங்கவுள்ளதாக கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.