தற்காலிக ஆசிரியர் நியமனம் ஆபத்து: உயர் நீதிமன்றம்
மதுரை: தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தகுதியற்ற, தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியா் பணிகளில் 13,331 காலியிடங்கள் நிலவுகின்றன. இவற்றை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியா்களை கொண்டு தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. இதற்கான பணிகள் தற்போது பள்ளிகளில் தீவிரமாக நடைபெற்று வந்தது.
ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.
அதில், கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை. ஆனால் அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள்.
தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் எதுவும் இல்லை. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களுக்கு தேவையான நபர்களை பணியில் நியமித்து கொள்ள வாய்ப்பு உள்ளது.
இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. தமிழக அரசுத் தரப்பில் விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் உத்திரவிட்டுள்ளார். இந்த வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.