
சென்னை: சேலம் மாவட்டம் மேட்டூரில், உயிரைக் காக்கும் மருத்துவர்கள் சாகும்வரை உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழக அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
மக்களின் உயிரைக் காக்கும் அரசு மருத்துவர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்டம் மேட்டூரில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். இரண்டாம் நாளாக தொடரும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ள பல மருத்துவர்கள் உடல் நலிவுற்ற நிலையில் உள்ளனர். இதை அரசு வேடிக்கை பார்க்காமல், உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதையும் படிக்க: விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-53
ஏற்கெனவே திமுக ஆட்சியின்போது வெளியிடப்பட்ட அரசாணையின்படி ஊதியம் வழங்குதல், கரோனாவால் உயிரிழந்த அரசு மருத்துவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அவர்கள் போராடுகின்றனர்.
கரோனா காலத்தில் மக்களின் உயிரைக் காப்பதில் மகத்தான பங்காற்றிய மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, இந்தப் போராட்டத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டியது அரசின் கடமை என்று மக்கள் நீதி மய்யம் சுட்டுரையில் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.