உக்ரைனிலிருந்து தமிழகம் திரும்பிய மாணவ மாணவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து உரையாடினார். உக்ரைனிலிருந்து திரும்பிய அனுபவத்தையும், அவர்களது கோரிக்கையையும் கேட்டறிந்தார்.
உக்ரைன் மீது ரஷியா போர்த்தொடுத்து வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. உக்ரைனில் மருத்துவம் பயின்றுவந்த தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களும் தாயகம் திரும்பினர்.
இந்நிலையில், அவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார். நெல்லையில் உள்ள விடுதியில் அவர்களைச் சந்தித்த மு.க.ஸ்டாலின் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடன் தேநீர் அருந்தினார்.
அதனைத்தொடர்ந்து உக்ரைன் போரில் மாணவர்களுடைய அனுபவங்கள் குறித்தும், அவர்களுடைய கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.