சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர லஞ்சம் தந்ததாக தொடரப்பட்ட வழக்கில், சசிகலாவும், இளவரசியும் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளனர்.
சிறைத் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்காக, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று இருவரும் ஆஜரான நிலையில், முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது, தாங்கள் அடைக்கப்பட்டிருந்த சிறையில், சொகுசு வசதிகள் செய்து தரக் கோரி சிறைத் துறை அதிகாரிகளுக்கு ரூ. 2 கோடி லஞ்சம் கொடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சசிகலா மற்றும் இளவரசி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.