சங்ககிரியில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தற்காப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காரத்தே கலைகளில் ஒன்றான ஓடுகளை உடைக்கும் மாணவிகள்.
சங்ககிரியில்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தற்காப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காரத்தே கலைகளில் ஒன்றான ஓடுகளை உடைக்கும் மாணவிகள்.

சங்ககிரியில் தற்காப்பு கலைகள் விழிப்பணர்வு நிகழ்ச்சி 

உலக மகளிர்தினத்தினையொட்டி சங்ககிரியில் சங்ககிரி கியோ கோஷின் அமைப்பு சார்பில் தற்காப்பு கலைகளில் ஒன்றான காரத்தே, சங்ககிரி சிவாலாயம் கலைக்கூடம் சார்பில் பரதநாட்டியம் அரங்கேற்றம் நிகழ்ச்சிகள்
Published on



சங்ககிரி: உலக மகளிர்தினத்தினையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரியில் சங்ககிரி கியோ கோஷின் அமைப்பு சார்பில் தற்காப்பு கலைகளில் ஒன்றான காரத்தே, சங்ககிரி சிவாலாயம் கலைக்கூடம் சார்பில் பரதநாட்டியம் அரங்கேற்றம் நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

சங்ககிரி கியோ கோஷின் அமைப்பு சார்பில் தற்காப்பு கலைகளில் ஒன்றான காரத்தே குறித்து அதன் பயிற்சியாளர் கே.அர்ச்சுணன் பெண் குழந்தைகளுக்கு காரத்தே கற்று கொடுப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்தும், கரோத்தை கற்றப்பின்னர் அவர்களது மனம் ஒரு முகப்படுத்தி படிப்பில் கவனம் செலுத்துவது பற்றியும் விளக்கிப்பேசினார். 

சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தற்காப்புகலைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பரதநாட்டியம் ஆடிய மாணவ, மாணவிகள்.

இந்நிகழ்ச்சியில் 5 வயது முதல் 17 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். காரத்தே பயிற்சி பெற்றவர்கள் ஓடுகளை உடைத்து பொதுமக்களிடத்தில் அவர்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.  

அதனையடுத்து சிவாலாயம் கலைக்கூடம் சார்பில் அதன் பயிற்சியாளர் விஜய் மாணவிகளுக்கு பரதநாட்டியத்தின் பெருமைகள் குறித்தும், பரதநாட்டியம் கற்றுக்கொள்வதால் ஏற்படும் பயன்கள் குறித்து விளக்கி கூறினார். 

பின்னர் மாணவிகள் பல்வேறு சங்கித கீர்த்தனைகளுக்கு தகுந்தாற்போல் பரதநாட்டியம் ஆடினர். 

இந்நிகழ்ச்சியில் காரத்தே, பரதநாட்டியம் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com