மகளிருக்கு இலவச பேருந்து திட்டம்: மானியமாக ரூ. 1,520 கோடி ஒதுக்கீடு

தமிழக பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு 5,375.51 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
மகளிருக்கு இலவச பேருந்து திட்டம்: மானியமாக ரூ. 1,520 கோடி ஒதுக்கீடு
Published on
Updated on
1 min read

தமிழக பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கு 5,375.51 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார். 

போக்குவரத்துத் துறை அறிவிப்புகள்:

முதல்வரால் அறிவிக்கப்பட்ட மகளிருக்கு இலவச பேருந்துப் பயணத் திட்டத்தினால் மகளிர் பயணிகளின் பங்கு 40 சதவீதத்தில் இருந்து 61 சதவீதமாக உயர்ந்துள்ளது. இத்திட்டம், பெண்களின் சமூக, பொருளாதார நிலையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வரவு செலவுத்திட்டத்தில், மகளிருக்கு இலவச பேருந்துப் பயண மானியமாக 1,520 கோடி ரூபாயும், மாணவர்களுக்கான பேருந்துப் பயணக் கட்டணச் சலுகை மானியமாக 928 கோடி ரூபாயும், டீசல் மானியமாக 1,300 கோடி ரூபாயும் வழங்கப்படுகிறது.

KfW என்ற ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் பேருந்து சேவைகளை காலநிலைக்கு ஏற்ற நவீனமயமாக்கல் திட்டத்தில் 2,213 BS VI புதிய டீசல் பேருந்துகளும், 500 புதிய மின்-பேருந்துகளும் (e-bus) கொள்முதல் செய்யப்படும்.

இதற்காக போக்குவரத்துத் துறைக்கு 5,375.51 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com