
திமுகவின் அச்சுறுத்தல்களை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திப்பேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும், இல்லாவிட்டால் ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டரில் பதிலளித்துள்ளார்.
இதையும் படிக்க- ஸ்டாலின் குறித்து அவதூறு: அண்ணாமலைக்கு நோட்டீஸ்
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், 100 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு திமுக கட்சி, என் மீது, மானநஷ்ட வழக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பதை அறிந்தேன்.
தி.மு.க.வின் முதன்மை குடும்பம், சாதாரண சாமானியனான என்னையும், அவர்களைப் போன்ற துபை குடும்பத்துக்கு, சரிசமமாக நடத்துகிறது.
நம் நாட்டின் நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. திமுகவின் அச்சுறுத்தல்களை எல்லாம் நீதிமன்றத்தில் சந்திப்பேன்.
தமிழகத்துக்கான, என் போராட்டம் தொடரும்... துணிவுடன். மக்கள் துணையுடன்... இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.