பொதுத்துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கக் கூடாது, விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டு நாள்கள் பொது வேலைநிறுத்தத்துக்கு அகில இந்திய தொழிற்சங்கக் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இந்த அறிவிப்பின்படி, பொதுவேலை நிறுத்தம் திங்கள்கிழமை காலை தொடங்கியது. போராட்டத்தில் மத்திய, மாநில அரசு ஊழியா்கள் பங்கேற்றனா். தமிழகத்தில் போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசியத் துறைத் தொழிலாளா்கள் போராட்டத்தில் இறங்கியதால், இயல்பை விட பாதிப்பு அதிகமாக இருந்தது.