ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான மானிய உதவித் திட்டங்கள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மானிய உதவித் திட்டங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி நிலவரங்கள் குறித்து அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் பேரவையில் இன்று வெளியிட்டார்.
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான மானிய உதவித் திட்டங்கள்
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான மானிய உதவித் திட்டங்கள்
Published on
Updated on
1 min read

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மானிய உதவித் திட்டங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கப்பட்ட நிதி நிலவரங்கள் குறித்து அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் பேரவையில் இன்று வெளியிட்டார்.

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பில், 

விவசாயிகளுக்கான துரித மின் இணைப்பு மானிய உதவித் திட்டம் 
1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் சார்பாக 90 சதவீத வைப்புத் தொகை செலுத்தி இலவச மின் இணைப்பு வழங்க, 1,827 விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.28.65 கோடி செலவிடப்பட்டுள்ளது.
புதிய மைன் மோட்டார் வாங்க 1800 ஆதிதிராவிட விவசாயிகள் மற்றும் 200 பழங்குடியின விவசாயிகள் என மொத்தம் 2000 பேருக்கு ஒரு விவசாயிக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

200 நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் நிலம் வாங்க ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பழங்குடியினர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.175 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மானியத்துடன் கூடிய கடன் (நிலம் வாங்கும் திட்டம் - நில மேம்பாட்டுத் திட்டம்)

நிலமற்ற ஆதி திராவிட மகளிரை நில உடமையாளர்களாக்கி அவர்களது சமூக நிலையினை உயர்த்திட சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.   மகளில் இல்லாத குடும்பங்களில் ஆண்களுக்கு நிதியுதவி வழங்கப்படும்.

மேலும்

ஆதி திராவிடர்களுக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்
பழங்குடியினருக்கான தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் உள்ளிட்டவற்றுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிதி குறித்த தகவல்களும் வெளியிடப்பட்டுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com