
சென்னை தலைமைச் செயலகம் காவல் நிலையத்தில், விசாரணை கைதி விக்னேஷ் மர்மமான முறையில் மரணம் அடைந்த விவகாரத்தில், இன்று இரு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் கஞ்சா மற்றும் பட்டாக் கத்தியுடன் வந்ததாக சுரேஷ், விக்னேஷ் ஆகியோரை ஏப்ரல் 18-ல் தலைமைச் செயலக காலனி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும், காவல் நிலையத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, விக்னேஷ் சந்தேகமான முறையில் மரணம் அடைந்தார்.
விசாரணையின்போது வலிப்பு வந்து, விக்னேஷ் மரணம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால், போலீசார் கடுமையாக தாக்கியதால் தான் விக்னேஷ் மரணம் அடைந்ததாக, அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.
இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி., - டி.எஸ்.பி., சரவணன் தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் இன்று காவல் நிலைய எழுத்தர் முனாஃப், பவுன்ராஜ் ஆகிய இரு போலீசார்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.