

வெம்பக்கோட்டையில் நடந்த அகழாய்வில் 2 அணிகலன் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே விஜயகரிசல்குளம் ஊராட்சிக்குள்பட்ட வெம்பக்கோட்டை வைப்பாற்றின் வடகரையில் 25 ஏக்கா் பரப்பளவில் கடந்த மாா்ச் 16 ஆம் தேதி முதல் அகழாய்வுப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் வெம்பக்கோட்டையில் இன்று நடந்த அகழாய்வில் 2 அணிகலன் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் இன்று நடந்த அகழாய்வில் இருந்து இரண்டு பாகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க- குளத்தில் துணி துவைக்க சென்றபோது நேர்ந்த சோகம்: 5 பெண்கள் பலி
விலங்கின் தந்தம், டெரகோட்டா களிமண்ணால் செய்யப்பட்ட அணிகலன்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.