திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நெல்லை கல்குவாரி விபத்து: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரண நிதி

நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

News image
கோப்புப்படம்
Updated On :17 மே 2022, 7:05 pm

DIN

நெல்லை கல்குவாரி விபத்தில் உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு ரூ.15 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் மிகப்பெரிய பாறைகள் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கிய இருவா் மீட்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனா். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.

இந்த விபத்தில் முருகன், செல்வன் ஆகியோா் உயிரிழந்துள்ளனா். அவா்களது குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசின் சாா்பாக தலா ரூ.10 லட்சமும், தொழிலாளா் நல வாரியம் மூலமாக தலா ரூ.5 லட்சமும் அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.