
நீலகிரி வந்துள்ள குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு இன்று குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் ராணுவ அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குப் பின் உதகையிலுள்ள ராஜ்பவன் மாளிகையை வந்தடைந்தார்.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மற்றும் உதகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்காக குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இன்று நீலகிரி வந்தடைந்தார். குன்னூரில் ராணுவ அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சிக்குப் பின்பு சாலை வழியாக உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ராஜ்பவன் மாளிகைக்கு வந்தடைந்தார்.
நாளை உதகை லாரன்ஸ் பள்ளியில் நடைபெறும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அவர், மீண்டும் உதகை ராஜ்பவன் மாளிகைக்கு வந்து அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு 20 ஆம் தேதி ஹெலிகாப்டர் மூலம் கோவை சென்று அங்கிருந்து தில்லி புறப்படுகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
குடியரசுத் துணைத் தலைவர் வருகையையொட்டி கோத்தகிரி, குன்னூர், உதகை உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குடியரசு துணைத் தலைவர் வருகையால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.