சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.248 அதிகரிப்பு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 248 அதிகரித்துள்ளது. 

News image
Updated On :20 மே 2022, 4:52 am

DIN



சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 248 அதிகரித்துள்ளது. 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.248 அதிகரித்து, ரூ.38,288-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே சென்னையில் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், ரஷியா-உக்ரைன் போா் காரணமாக, மார்ச் மாதம் முதல் தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்களுடன் விற்பனையானது. நேற்று புதன்கிழமை சவரனுக்கு ரூ.128 உயா்ந்து, ரூ.38,040-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக இன்று வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.248 அதிகரித்து, ரூ.38,288-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.16 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.4,786-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரத்தில், வெள்ளி கிராமுக்கு 90 காசுகள் அதிகரித்து, ரூ.65.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 அதிகரித்து, கிலோ ரூ.65,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.