

சேலம்: ஏற்காடு மலைப்பாதையின் 18-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே திடீரென ராட்சத பாறை ஒன்று சரிந்து சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம், ஏற்காடு சுற்றுலா தளத்தில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மலைப் பாதையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் சனிக்கிழமை காலை ஏற்காடு மலைப்பாதை 18 -ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே திடீரென ராட்சத பாறை உருண்டு சாலையில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த ஏற்காடு காவல்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை பொறியாளா்கள் மற்றும் பணியாளா்கள் பொக்லைன் இயந்திரம் கொண்டு ராட்சத பாறை உடைத்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அதிர்ஷ்டவசமாக பாறை சரிந்து விழுந்த போது வாகன ஓட்டிகள் வராததால் அசாம்பாவித சம்பவம் எதுவும் ஏற்படவில்லை.
மேலும் பாறை அகற்றும் பணியால் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ராட்சத பாறை அகற்றிய பின்னர் போக்குவரத்து மீண்டும் சீரானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.