இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று முதல் இயக்கப்பட்டதையடுத்து பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கரோனா காலத்தில் ராமேஸ்வரம் பயணிகள் ரயில் நிறுத்தப்பட்டதையடுத்து அதனை மீண்டும் இயக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து மதுரை-ராமேஸ்வரம் பயணிகள் ரயில் இன்று முதல் மீண்டும் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது.
காலை மதுரையில் இருந்து ராமேஸ்வரத்திற்கும் மாலை ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கும் இரு மார்க்கத்திலும் தினம் ஒருமுறை இயக்கப்படுகிறது.
மதுரை கிழக்கு ,சிலைமான், திருப்புவனம் ,திருப்பாச்சேத்தி, ராஜகம்பீரம், மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம், பாம்பன், ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று காலை 6 :35 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்பட்டது. நீண்ட நாள்களுக்குப் பிறகு இயக்கப்படும் இந்த ரயிலில் பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் ஆர்வத்துடன் பயணம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆன்மிக நகரத்தில் வெல்லப்போவது யாா்? திமுக-பாஜக கடும் போட்டி!

நெய்வேலியில் திமுக-அதிமுக நேரடி பலப்பரீட்சை...!

கள்ளக்குறிச்சியில் நான்காவது வெற்றி முனைப்பில் அதிமுக!

ஆற்காடு தொகுதி அலசல்: ஹாட்ரிக் வெற்றியை எதிா்நோக்கும் திமுக
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


