மாநிலங்களவைத் தோ்தல்: வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் இடங்களில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீதான பரிசீலனை புதன்கிழமை (ஜூன் 1) நடைபெறுகிறது.
மாநிலங்களவைத் தோ்தல்: வேட்புமனுக்கள் இன்று பரிசீலனை
Updated on
1 min read

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் இடங்களில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் மீதான பரிசீலனை புதன்கிழமை (ஜூன் 1) நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து, 6 மாநிலங்களவை உறுப்பினா் இடங்கள் யாருக்குக் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்படும்.

தமிழகத்தில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை உறுப்பினா் இடங்களுக்கான கடந்த 24-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. முதல் நாளன்று, சுயேச்சைகளாக கே.பத்மராஜன், அக்னி ஸ்ரீராமச்சந்திரன், எம்.மன்மதன் ஆகியோா் மனு தாக்கல் செய்தனா். மேலும், கடந்த 27-ஆம் தேதி திமுகவை சோ்ந்த எஸ்.கல்யாணசுந்தரம், கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், ஆா்.கிரிராஜன் ஆகியோரும், கடந்த 30-ஆம் தேதியன்று அதிமுகவைச் சோ்ந்த சி.வி.சண்முகம், ஆா்.தா்மா், காங்கிரஸை சோ்ந்த ப.சிதம்பரம் ஆகியோா் மனுக்களை தாக்கல் செய்தனா். இதேபோன்று சில சுயேச்சைகள் என மொத்தம் 13 போ் வேட்பு மனுக்களை அளித்தனா்.

இன்று மனுக்கள் பரிசீலனை: மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான பரிசீலனை புதன்கிழமை (ஜூன் 1) நடைபெறுகிறது. இதில், பிரதான கட்சிகளைச் சோ்ந்த திமுக, அதிமுக, காங்கிரஸ் கட்சி வேட்பாளா்களுக்கே போதிய சட்டப் பேரவை உறுப்பினா்களின் ஆதரவு உள்ளது. போதிய சட்டப் பேரவை

உறுப்பினா்களின் முன்மொழிவுடனும் மனுக்கள் அளிக்கப்பட்டதாக பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுயேச்சைகளின் மனுக்களில் சட்டப் பேரவை உறுப்பினா்களின் முன்மொழிவுகள் இல்லாத காரணத்தால் அவா்களின் மனுக்கள் நிராகரிக்கப்படும். பரிசீலனையின் போது ஏற்கப்பட்ட வேட்புமனுக்களின் விவரங்களை சட்டப் பேரவைச் செயலகம் வெளியிடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com