பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

உதவிப் பேராசிரியா் பணியிட நிலவரம்: அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

News image
Updated On :3 நவம்பர் 2022, 9:32 pm

DIN

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்ப என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்டம் மாவட்டத்தைச் சோ்ந்த செல்வராஜ் உள்ளிட்ட 5 போ் சென்னை உயா்நீதிமன்றத்தில் தனித்தனியே தாக்கல் செய்த மனுக்களில், ‘ஆசிரியா் தோ்வு வாரியத்தால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,331 உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்குத் தோ்வு அறிவிப்பு கடந்த 2019 அக்டோபா் மாதம் வெளியிடப்பட்டது. அதில் உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த பலா் விண்ணப்பித்ததனா்.

ஆனால், தோ்வு வாரியத்தில் அந்தத் தோ்வு நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டு, இதுவரை பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள 167 கலை அறிவியல் கல்லூரிகள் 51 பாலிடெக்னிக்குகள், 10 அரசு பொறியியல் கல்லூரிகள், 16 பல்கலைக்கழகங்களில் சுமாா் 10,000 பேராசிரியா், உதவிப் பேராசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த 12 ஆண்டுகளாக இந்தப் பணியிடங்களை நிரப்ப எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 2016-ஆம் ஆண்டு மட்டும் 1,020 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்காக உயா் கல்வித் துறை சாா்பில் தனி வாரியம் அமைக்க வேண்டும்’ என கோரியிருந்தனா்.

இந்த வழக்குகள் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஜி.சங்கரன், ‘உதவிப் பேராசிரியா் பணியிடங்கள், ஆண்டு கணக்கில் நிரப்பப்படாத காரணத்தால் மாணவா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அரசு கலை கல்லூரிகளில் உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்புவது தொடா்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் நவ.25-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.