சாக்கடை நீரில் கான்கிரீட்டைக் கொட்டி கால்வாய் அமைக்கும் பணியாளர்கள்!

சேலம் மாநகராட்சிப் பகுதியில் தேங்கி நிற்கும் சாக்கடைத் தண்ணீரில் கான்கிரீட் ஊற்றி கால்வாய் அமைத்ததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 
சாக்கடைத் தண்ணீரில் கான்கிரீட் ஊற்றி கால்வாய் அமைத்த பணியாளர்கள்
சாக்கடைத் தண்ணீரில் கான்கிரீட் ஊற்றி கால்வாய் அமைத்த பணியாளர்கள்

சேலம் மாநகராட்சிப் பகுதியில் தேங்கி நிற்கும் சாக்கடைத் தண்ணீரில் கான்கிரீட் ஊற்றி கால்வாய் அமைத்ததால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 

சேலம் அழகாபுரம் 17 வது வார்டு பகுதியில் உள்ள அத்வேதா ஆசிரமம் சாலையில் மாநகராட்சி சார்பாக சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை பாலசுப்ரமணியம் என்ற ஒப்பந்ததாரர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கான்கிரீட் கலவைகள் போடும் பணி இன்று நடைபெற்றது.

இந்த பள்ளத்தில் பிளாஸ்டிக் குப்பைகள், இறந்த எலி, சேறும்சகதியும் அதிகளவில் இருந்த நிலையில் அவற்றை அகற்றாமல் கான்கிரீட் கலவைகளை ஊற்றினர்.

தண்ணீர் வெளியேற்றப்பட்ட பிறகு கான்கிரீட் கலவை எங்கு உள்ளது என்பதே  தெரியாத அளவிற்கு சேரும் சகதியும் பிளாஸ்டிக் குப்பைகளும் நிறைந்து காட்சியளித்தது.

முறையான நடவடிக்கைகள் எடுக்காமல் சாக்கடை கால்வாய் அமைப்பதற்காக கான்கிரீட் கலவைகளை பணியாளர்கள் ஊற்றியது அப்பகுதி பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com