திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்லிடப்பேசி பயன்படுத்தத் தடை!

திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்லிடப்பேசி பயன்படுத்தத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் செல்லிடப்பேசி பயன்படுத்தத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் முருகன் கோயில் திகழ்கிறது. பல புகழ்களை தன்னகத்தேக் கொண்ட திருச்செந்தூர் முருகன் கோயிலின் புனிதத் தன்மையை பாதுகாக்க வேண்டியது நமது கடடையாகும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர். 

இந்நிலையில், திருச்செந்தூர் கோயிலுக்குள் அச்சகர்கள் உள்பட பக்தர்கள் யாரும் செல்லிடப்பேசியை பயன்படுத்தக்கூடாது என்று கண்டிப்பாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தடை உத்தரவை மீறி செல்லிடப்பேசி பயன்படுத்தினால், பறிமுதல் செய்யப்பட்ட செல்லிடப்பேசியை திருப்பி ஒப்படைக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளது. 

கோயிலில் செல்லிடப்பேசி பயன்படுத்த விதிக்கப்பட்டத் தடையை, உடனடியாக அறநிலையத்துறை அமல்படுத்துமாறும், இதுகுறித்து அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புமாறும் உத்தரவிட்டுள்ளது.

கோயிலின் உள்ளே செஃல்பி, புகைப்படம் எடுப்பது இருப்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும். 

தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் சத்திரமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியதோடு, கோயிலில் யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பது உள்ளது. கோயிலுக்குள் அநாகரிகமான ஆடைகளை அணிந்துவருவது வேதனை அளிக்கும் விஷயமாக உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com