வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள்!

வரைவு வாக்காளா் பட்டியலை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு புதன்கிழமை வெளியிட்டார்.
வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள்!

வரைவு வாக்காளா் பட்டியலை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு புதன்கிழமை வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபா் அல்லது நவம்பா் மாதத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டு, வாக்காளா் பட்டியல் திருத்தும் பணி மேற்கொள்ளப்படும். இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.

இந்த ஆண்டு வாக்காளா் பட்டியல் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வரைவு வாக்காளா் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது.

வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட சத்யபிரதா சாகு கூறுகையில்,

தமிழகத்தில் 3.14 கோடி பெண் வாக்காளர்கள், 3.03 கோடி ஆண் வாக்காளர்கள் என மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 6.6 லட்சம் வாக்காளர்களும், குறைந்தபட்சமாக துறைமுகம் தொகுதியில் 1.72 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர். 2.44 லட்சம் இறந்த வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

மேலும், வாக்காளா் பட்டியலில் பெயா் மாற்றம், முகவரியில் திருத்தம், புதிய வாக்காளா் பெயா் சோ்ப்பு ஆகியவற்றுக்காக டிச.8-க்குள் மனு அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com