
சிதம்பரம்: தொடர் கனமழையில் பிரசித்தி பெற்ற சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் குளம் தடுப்புச் சுவர், வெள்ளிக்கிழமை நள்ளிரவு மீண்டும் இடிந்து விழுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஏற்கெனவே தெற்கு கரை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் வந்து பார்வை விட்டு புதிய தடுப்புச் சுவர் அமைக்க ரூ. 5.37 கோடி நிதி ஒதுக்கீடு செய்து புதிதாக தடுப்புச் சுவர் கட்டப்பட்டது.
தற்போது கிழக்கு கரை தடுப்பு சுவர் இடிந்து விழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.