பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோவில் பயணிக்க ஒரே டிக்கெட்: முதல்வர் இன்று ஆலோசனை

ஒரே பயணச்சீட்டில் மாநகரப் பேருந்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில்களின் பயணிக்கும் வசதி குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

ஒரே பயணச்சீட்டில் மாநகரப் பேருந்து, புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில்களின் பயணிக்கும் வசதி குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நாள்தோறும் பணிக்கு செல்லும் லட்சக்கணக்கானோர் பேருந்துகள், புறநகர் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

சிலரின் வீடுகளிலிருந்து அலுவலகத்திற்கு செல்வதற்கு பேருந்து மற்றும் ரயில்கள் ஆகிய இரு போக்குவரத்தையும் பயன்படுத்தினால்தான் விரைவாக அலுவலகம் சென்றடையும் சூழலும் உள்ளது.

அனைத்து போக்குவரத்தையும் பயன்படுத்தும் ஒருவர், வெவ்வேறு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பேருந்து, ரயில் உள்ளிட்டவைக்கு தனித்தனியே பயணச்சீட்டு வாங்கும் சூழல் உள்ளது.

இதனால், மாநகரப் போக்குவரத்தின் கீழ் இயங்கும் பேருந்து, சென்னை மெட்ரோ நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மெட்ரோ ரயில்கள் மற்றும் தெற்கு ரயில்வேவின் கீழ் இயங்கும் புறநகர் ரயில்களை இணைத்து ஒரே பயணச்சீட்டில் பயணம் செய்வதற்கான கோரிக்கை எழுந்துள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகரப் பொதுப் போக்குவரத்தை இணைத்து ஒரே பயணச்சீட்டு திட்டம் கொண்டுவருவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com