
சென்னை பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் மாறியது குறித்து விசாரணை நடத்த குழு அமைத்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் 131 இணைப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் படிக்கும் மாணவா்களுக்கான நடப்பு பருவத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதில் 2-ஆம் ஆண்டு மாணவா்களுக்கு தமிழ் பாடத்தோ்வு காலை நடைபெற்றது. அதில் மாணவா்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாள் தவறுதலாகவும், அது வேறு பருவப் பாடங்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து வினாத்தாள் குளறுபடி தொடா்பாக மாணவா்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து, வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த தமிழ் பாடத் தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
இதனால் தோ்வுக்கு தயாா் நிலையில் வந்திருந்த மாணவ, மாணவிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா். இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் வினாத்தாள் மாறியது குறித்து விசாரணை நடத்த தொழில்நுட்பக் கல்வி ஆணையர் லட்சுமி பிரியா உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைத்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் வினாத்தாள் மாறியது குறித்த விசாரணை அறிக்கையை 2 மாதங்களுக்குள் அளிக்கவும் உயர்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.