பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பொங்கலுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். 
பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்!

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பொங்கலுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். 

பண்டிகை காலங்களில் சென்னை கோயம்பேட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளை, வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கும் வகையில் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டிருக்கும் இந்த பேருந்து நிலையம் கட்டுமானப் பணி கடந்த 2019ஆம் தேதி பணி துவங்கப்பட்ட நிலையில் 2022ல் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் வீட்டு வசதித்துறை மூலம் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வீட்டுவசதித் துறை அமைச்சர் முத்துசாமி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் அடிப்படை கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும் மின் இணைப்பு உள்ளிட்ட இதர வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். 

மேலும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பொங்கலுக்குள் பயன்பாட்டுக்கு வர முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com