அரசு கேபிள் டிவி சேவையை இடையூறின்றி வழங்க உத்தரவு
தனியார் மென்பொருள் நிறுவனத்தால் சட்டவிரோதமாக அரசு கேபிள் டிவி சேவையில் இடையூறு செய்த விவகாரத்தில் அதன் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

அரசு கேபிள் டிவி சேவையை இடையூறின்றி வழங்க உத்தரவு

அரசு கேபிள் டிவி சேவையை இடையூறின்றி வழங்க உத்தரவு
அரசு கேபிள் டிவி நிறுவன கேபிள் சேவையை இடையூறின்றி வழங்க தனியார் மென்பொருள் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் மென்பொருள் நிறுவனத்தால் சட்டவிரோதமாக அரசு கேபிள் டிவி சேவையில் இடையூறு செய்த விவகாரத்தில் அதன் நிர்வாகி கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவையில் கடந்த இரு நாள்களாக தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் வைத்திருக்கும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். அதேவேளையில் கேபிள் டிவி உரிமையாளா்கள், தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும்படி வலியுறுத்தி வருகின்றனா்
இந்நிலையில், அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு மென்பொருள் சேவை கொடுத்து வந்த தனியாா் திட்டமிட்டு தடை ஏற்படுத்தியதாக புகாா் எழுந்தது. மாநிலம் முழுவதும் 22 லட்சம் செட்டாப் பாக்ஸ்களை அந்த நிறுவனம் முடக்கியிருப்பதாகவும் தகவல் வெளியானது.
அதனைத் தொடர்ந்து அரசு கேபிள் டிவி சேவையில் தனியாா் நிறுவனம் திட்டமிட்டு தடை ஏற்படுத்தியதாக எழுந்த புகாா் தொடா்பாக, அந்த நிறுவனத்தின் நிா்வாகி ராஜன் கைது செய்யப்பட்டார். சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...