குரோம்பேட்டையில் ரூ.110 கோடியில் அரசு மருத்துவமனை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை குரோம்பேட்டையில் ரூ.110 கோடியில் புதிய மருத்துவமனை கட்டப்படவுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை குரோம்பேட்டையில் ரூ.110 கோடியில் புதிய மருத்துவமனை கட்டப்படவுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருப்பதாவது:

குரோம்பேட்டையில் உள்ள தாம்பரம் வட்ட அரசு மருத்துவமனை, செங்கல்பட்டு மாவட்ட மருத்துவனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை குரோம்பேட்டையில் ரூ.110 கோடியில் புதிய மருத்துவமனை கட்டப்படவுள்ளது. 5 ஏக்கர் நிலத்தில் கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்பட உள்ளன. குரோம்பேட்டை மருத்துவமனை ஒருங்கினைந்த மகளிர் - குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றி அமைக்கப்படும்.

தமிழ்நாட்டில் தினமும் அரசு மருத்துவமனைகளில் 6 லட்சம் புற நோயாளிகளுக்கும், 70,000 உள் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் சிலர் அவதூறு பரப்பி விளைவிக்க முயற்சி செய்கிறார்கள் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com