
அரசியல் சாசன நாளன்று கல்லூரிகளில் ‘கிராம பாரம்பரிய பஞ்சாயத்து’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்த பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) வெளியிட்டுள்ள அறிக்கைக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நவம்பர் 26ஆம் தேதி அரசியல் சாசன நாள் கொண்டாடப்படுகிறது. அன்று அனைத்து கல்லூரிகளிலும் "முன்னுதாரன மன்னர்" - "கிராம பாரம்பரிய பஞ்சாயத்து" என்ற தலைப்பில் உரை நிகழ்த்த யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சு.வெங்கடேசன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,
“அரசியல் சாசனத்திற்கும் பாரம்பரிய பஞ்சாயத்துக்கும் என்ன சம்பந்தம்? இது கான்ஸ்டிடியூசன் நாளா? கட்டப் பஞ்சாயத்து நாளா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிக்க | நாட்டை உலுக்கிய அரியலூர் ரயில் விபத்து: 66 ஆண்டுகள் அகலாத சோகம்!
மேலும், ஜனநாயகத்திற்கான நாளினை சனாதனத்தின் நாளாக மாற்ற கருத்துத்தாள் வழங்கியுள்ள இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் மீதும், யு.ஜி.சி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.