இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

அரசுப் பள்ளியாக மாற்றக் கோரி மாணவிகள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில்,  இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளியை அரசுப் பள்ளியாக மாற்றக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

News image

அரசுப் பள்ளியாக மாற்றக் கோரி மாணவிகள் போராட்டம்

Updated On :29 நவம்பர் 2022, 5:35 am


ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில்,  இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளியை அரசுப் பள்ளியாக மாற்றக் கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் பர்வதவர்த்தனி அம்மன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 

Story image

இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டைப் பெரும் வகையில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த பள்ளியை அரசு பள்ளியாக மாற்ற  நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Story image

ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டும், மாணவிகளுக்கு ஏற்றவாறு கழிப்பிட வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட மாணவிகள் ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு தர்னா போராட்டத்தில்  ஈடுபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.