மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு குறைக்கிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு குறைக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு குறைக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்துவரும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அந்த உரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நமது உணர்வுகளை பேசுவதுடன் நிறுத்தாமல் செயல்பாட்டில் காட்ட வேண்டிய நேரம் இது. மாநில சுயாட்சியை உருவாக்குவதற்கு வழிகாட்டியவர் கலைஞர். பேரறிஞர் அண்ணா தனது இறுதி கடிதத்தில் வலியுறுத்தியது மாநில சுயாட்சித்தான்.

அரசியலமைப்பு உருவாக்கியவர்கள் ஒற்றை ஆட்சி கூடாது; கூட்டாட்சிதான் வேண்டும் எனக் கூறினர். மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு குறைக்கிறது. நிதி உரிமைகளை பறித்து மாநிலங்களை விரக்தி உணர்வுக்கு மத்திய அரசு தள்ளுகிறது. அரசியலமைப்பு சட்டம் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.

ஜி.எஸ்.டி மூலம் மாநிலத்தின் நிதி உரிமையை  மத்திய அரசு பறிக்கிறது. நிதி உரிமை பறிக்கப்படுவதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சி மத்திய அரசு தடுக்கிறது.

தகுதி இருந்தால் மட்டுமே படிக்க வரவேண்டும் என்ற பழமைவாத கருத்தின் காரணமாகவே நீட் தேர்வை எதிர்க்கிறோம். நேரடியாக செய்ய முடியாத அரசியல் தலையீடுகளை சட்டத்தை கொண்டு செய்யப் மத்திய அரசு பார்க்கிறது. மாநிலங்களின் பிரச்னைகள் தொடர்பாக கடிதம் எழுதியும் பதில் வருவதில்லை.

திமுக, கம்யூ. ஆட்சியில் உள்ள மாநிலங்களுக்காக மட்டும் பேசவில்லை. அனைத்து  மாநிலங்களுக்காவும் பேசுகிறோம். மாநிலங்களை காப்பாற்றுவதே இந்தியாவை காப்பாற்றுவது ஆகும். மாநிலங்களை காப்பாற்றுவது என்பது மாநில மக்களின் உரிமை, மொழி, கலாசாரத்தை காப்பாற்றுவது ஆகும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com