தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கோயில் பெயரில் தனிநபர் இணையதளம்: முடக்க உத்தரவு

கோயில் பெயரில் தனிநபர்கள் நடத்தும் இணையதளங்களை முடக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :11 அக்டோபர் 2022, 9:30 am

DIN

கோயில் பெயரில் தனிநபர்கள் நடத்தும் இணையதளங்களை முடக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

கோயில் பெயரில் இணையதளம் நடத்தி வசூல் செய்பவர்களின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தம்பதியரின் 60-ஆம் திருமணத்திற்கு பிரதிபெற்றது திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில்.

மயிலாடுதுறையில் உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் பெயரில் தனிநபர்கள் இணையதளம் நடத்தி வசூல் செய்வதாக புகார் தெரிவிக்கப்பட்டது. 60 ஆம் திருமணம் நடத்த ரூ.2000 வசூலிக்கப்படும் நிலையில், தனிநபர் ரூ.4 லட்சம் வரை வசூலிக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த மார்க்கண்டன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு தொடர்ந்தார். கோயில் பெயரில் தனியார் நடத்தும் இணைய தளங்களை முடக்க உத்தரவிடுமாறு மனுதாரர் கோரிக்கை விடுத்து இருந்தார்.

இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள், மக்களின் மத உணர்வை வியாபாரமாக்க வேண்டாம் என்று கண்டிப்பு தெரிவித்தனர்.

பொது நல மனுவை விசாரித்த நீதிபதிகள் மகா தேவன், சத்திய நாராயண பிரசாத் அமர்வு கோயில் பெயரில் தனிநபர்கள் நடத்தும் இணையதளங்களை முடக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.