வாலாஜாபேட்டை அருகே கல்குவாரி லாரிகளை சிறைப்பிடித்து மக்கள் போராட்டம்
வாலாஜாபேட்டை அருகே கல்குவாரி லாரிகள் சிறைப்பிடித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


வாலாஜாபேட்டை அருகே அரசு விதிகளை மீறி அதிகப்படியான பாரம் ஏற்றி வந்த கல்குவாரி லாரிகளை சிறைப்பிடித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை வட்டம், செங்காடு மோட்டூர், முசிறி கிராமங்களுக்கு இடையே அமைந்துள்ள அனந்தலை மலையைச் சுற்றி 10-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் பல வருடங்களாக செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கல் குவாரிகளில் இருந்து அதிக பாரம் ஏற்றி வந்த லாரிகளை கிராம பொதுமக்கள் சிறை பிடித்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனர். இதன் காரணமாக சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த வாலாஜா வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அதிக பாரம் ஏற்றி வந்த இரண்டு லாரிகளை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...