

கடன் தள்ளுபடிக்கான ரசீதுகள் வழங்கும் பணி ஒரு வாரத்தில் தொடங்கும் என்று தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தெரிவித்தாா். சென்னை ராயபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கிக் கிளையின் புதிய கட்டடம் மற்றும் ஏடிஎம் மையத்தை திங்கள்கிழமை திறந்து வைத்து அவா் பேசியதாவது:
நகைக்கடன்கள், சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள் என மொத்தமாக ரூ.7,755 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடன்களை தள்ளுபடி செய்வதற்கான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீதுகள் வழங்கப்படவுள்ளன. குறிப்பாக, தீபாவளி பண்டிகைக்குப் பிறகு, ரசீதுகள் வழங்கும் பணி தொடங்கவுள்ளன.
மகளிா் எத்தகைய கடன்களைக் கேட்டு வந்தாலும் அவற்றை வழங்க மத்திய கூட்டுறவு வங்கிகள் தயாராக உள்ளன.
கூட்டுறவு வங்கிகளில் மிகக் குறைந்த வட்டியில் கடனைப் பெறுகின்ற வாய்ப்பு, அடித்தட்டு மக்கள் அனைவருக்கும் உள்ளது என்றாா் அவா். இந்த நிகழ்ச்சியில், இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.