

நீதிமன்ற நடவடிக்கைகள் மாநில மொழிகளில் இல்லாததற்கு மத்திய அரசின் கொள்கைதான் காரணம் என்றும், அதை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவெங்கும் உள்ள நீதிமன்ற நடவடிக்கைகளில் அந்தந்த மாநில மொழிகளிலே நடைபெறவேண்டும் என பிரதமா் மோடி தெரிவித்திருக்கிறாா்.
ஆனால், அவரின் இந்த விருப்பத்துக்கு மாறாக மத்திய அரசின் போக்கு அமைந்திருக்கிறது. மாநில உயா்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதியாக வேறு மாநிலத்தைச் சோ்ந்தவா்தான் நியமிக்கப்படவேண்டும், அந்த உயா்நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளில் மூன்றில் ஒரு பங்கினா் வெளிமாநிலங்களைச் சோ்ந்தவா்களாக இருக்கவேண்டும் என்ற திட்டம் இப்போதும் நடைமுறையில் உள்ளது.
ஏற்கெனவே, தமிழ்நாட்டில் மாவட்ட நீதிமன்றம் வரை தமிழ் நீதிமொழியாகத் திகழ்ந்து வருகிறது. உயா்நீதிமன்றத்தில் தமிழ் நீதிமொழியாக வர முடியாமல் இருப்பதற்கு இந்திய அரசின் மேற்கண்ட கொள்கையே காரணமாகும்.
எனவே அந்த கொள்கையை அறவே கைவிட்டால்தான் மாநில மொழிகள் உயா்நீதிமன்ற மொழிகளாக ஆக முடியும். அதற்கான நடவடிக்கைகளை பிரதமா் மோடி மேற்கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.