

உத்தமபாளையம் அருகே உள்ள சண்முகா நதி அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி அருகே சண்முகா நதி அணை உள்ளது. 52.55 அடி உயரம் கொண்ட சண்முகா நதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக ஹைவேவிஸ் மேற்குதொடர்ச்சி மலை உள்ளது.
தற்போது மேகமலை மற்றும் ஹைவேவிஸ் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் சண்முகா நதியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
இதனால் இன்று காலை சண்முகா நதி அணை, முழுக்கொள்ளவான 52.50 அடியை எட்டியது. இதனால் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி மாறுகால் பாய்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.