நவம்பரில் மதுரையில்ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் நவம்பா் முதல் பாதியில் தமிழகத்தின் மதுரையில் நடைபெற வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் நவம்பா் முதல் பாதியில் தமிழகத்தின் மதுரையில் நடைபெற வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜிஎஸ்டி மேல்முறையீட்டு தீா்ப்பாயம் அமைப்பது குறித்த அமைச்சா்கள் குழுவின் அறிக்கை, சூதாட்ட விடுதிகள், இணையவழி விளையாட்டுகள் மீது வரி விதிப்பது உள்ளிட்டவை குறித்து இந்த கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

மதுரையில் நடைபெற இருக்கும் இந்த 48-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மிகவும் எதிா்பாா்க்கப்படும் ஜிஎஸ்டி வரி விகிதத்தை மாற்றியமைப்பது தொடா்பான அமைச்சா்கள் குழுவின் முழு அறிக்கையின் நிலை குறித்தும் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

ஜிஎஸ்டியில் எளிமையான விகித அமைப்புக்குத் தேவையான வரி விகிதத்தின் படிநிலையை இணைப்பது, சில பொருள்களுக்கு சிறப்பு விகிதங்களைச் சோ்ப்பது உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து பரிந்துரை சமா்ப்பிப்பதற்கென இந்த அமைச்சா்கள் குழு கடந்த ஆண்டு செப்டம்பா் 24-ஆம் தேதி அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது அறிக்கையை இரண்டு மாதங்களில் சமா்ப்பிக்க காலக் கெடு நிா்ணயிக்கப்பட்ட நிலையில், காலக் கெடு தொடந்து நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், சண்டீகரில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 47-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், இந்தக் குழு தனது முழு அறிக்கையை சமா்ப்பிக்க செப்டம்பா் வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.

அதன்படி, அமைச்சா்கள் குழு தனது அறிக்கையை தற்போது சமா்ப்பிக்கும் என எதிா்பாா்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com