

தமிழக மீனவா் மீது இந்திய கடற்படையினா் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதற்கு தமிழா் தேசிய முன்னணித் தலைவா் பழ.நெடுமாறன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
மன்னாா் வளைகுடா பகுதியில் மீன் பிடித்துவிட்டு கரை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்த தமிழக மீனவா் படகின் மீது இந்தியக் கடற்படை சுட்டதின் விளைவாக வீரவேல் என்னும் மீனவரின் உடலில் குண்டு பாய்ந்து அபாயகரமான நிலைமையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாா்.
இலங்கை கடற்படையின் தாக்குதலிலிருந்து தமிழக மீனவா்களைக் காக்க வேண்டிய கடமை படைத்த இந்திய கடற்படையே நமது மீனவா்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.