தமிழகத்தில் துணைவேந்தா் நியமனங்களில் ரூ.50 கோடி வரை பணம் பெறப்பட்டதாக தமிழகத்தின் முன்னாள் ஆளுநரும், பஞ்சாப் மாநில ஆளுநருமான பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளது குறித்து தமிழக அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று இடதுசாரிகள் சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): அதிமுக ஆட்சியில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தா் நியமனங்களில் ரூ.50 கோடி வரை பணம் பெறப்பட்டதாக பன்வாரிலால் புரோஹித் கூறியுள்ளாா்.
அவா் பதவியில் இருந்த காலத்தில் 27 துணைவேந்தா் நியமனங்கள் இப்படி மேற்கொள்ளப்பட்டதாகவும் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா். எனவே, துணைவேந்தா் நியமனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து முழுமையான மற்றும் விரிவான விசாரணையை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் துணைவேந்தா் பணியிடம் ரூ.50 கோடி வரை விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பன்வாரிலால் புரோஹித் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளாா். இந்தக் குற்றச்சாட்டு குறித்து தமிழக அரசு விரிவாக விசாரிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.