நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் களை கட்டியது!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் களை கட்டியது. புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து குடும்பத்துடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். 
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் களை கட்டியது!

நாடு முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி கொண்டாட்டம் களை கட்டியது. 

தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வரும் மக்கள், அதிகாலையே எண்ணெய் தேய்த்து நீராடி புத்தாடை அணிந்து, இல்லங்களில் தீப ஒளி ஏற்றி இறவைனை வழிபட்டும், பட்டாசு வெடித்தும், சின்னஞ்சிறு குழந்தைகள் வண்ண ஆடைகள் அணிந்து, மகிழ்ச்சியாக மத்தாப்புகளைக் கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இளைஞர்கள், பெரியவர்கள் விதவிதமான பட்டாசுகளை வெடித்து கொண்டாடி வருகின்றனர். 

தித்திக்கும் தீப ஒளி திருநாளை நண்பர்கள், உறவினர்களுக்கு வாழ்த்துகளை பகிர்ந்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். 

தமிழகத்தின் முக்கிய கோயில்களில் அதிகாலையிலேயே பக்தர்கள் புத்தாடை அணிந்து குடும்பத்துடன் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

சென்னையில் பார்த்தசாரதி கோயில், கபாலீசுவரர் கோவில், வடபழனி முருகன் கோயில், மாங்காடு, திருவேற்காடு கோயில் உள்ளிட்ட ஆலங்களில் அதிகாலையே ஏராளமானோர் குடும்பத்துடன் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

பாதுகாப்பாக பட்டாசு வெடித்து மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாட்டில் உள்ள 352 தீயணைப்பு நிலையங்களில், 6700 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். 

சென்னையில் 49 தீயணைப்பு நிலையங்களுடன் கூடுதலாக 26 இடங்களில் புற தீயணைப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

அரசு மருத்துவமனைகளில் உள்ள தீக்காய வார்டுகளில் கூடுதல் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com