தமிழகத்தில் தென்பட்ட சூரிய கிரகணம்: அடுத்து எப்போது?

தமிழகத்தில் இன்று நிகழ்ந்த பகுதிநேர சூரிய கிரகணத்தை பல்வேறு மாவட்டங்களில் மக்கள் ஆவலுடன் பார்த்தனர்.
சேலத்தில் செவ்வாய்க்கிழமை தென்பட்ட பகுதி நேர சூரிய கிரகணம்.
சேலத்தில் செவ்வாய்க்கிழமை தென்பட்ட பகுதி நேர சூரிய கிரகணம்.
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் இன்று நிகழ்ந்த பகுதிநேர சூரிய கிரகணத்தை பல்வேறு மாவட்டங்களில் மக்கள் ஆவலுடன் பார்த்தனர்.

சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நோ்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். அதன்படி சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் எனவும் குறிப்பிடப்படுகிறது.

அந்தவகையில் இன்று நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மதியம் 2.19-க்கு தொடங்கி மாலை 6.32 மணி வரை நிகழ்ந்தது.

தமிழகத்தைப் பொருத்தவரை மாலை 5.14 முதல் 5.44 மணிவரை சூரியன் மறையும் நேரத்தில் அதன் 8 சதவீத பகுதி மட்டுமே மறைந்து கிரகணமாகக் காட்சியளித்தது.

இதனை பல்வேறு மாவட்டங்களில் அறிவியல் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பு கண்ணாடிகள் அணிந்தும், சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச் செய்தும் பார்த்தனர்.

தருமபுரியில் தென்பட்ட பகுதிநேர சூரிய கிரகணம்
தருமபுரியில் தென்பட்ட பகுதிநேர சூரிய கிரகணம்

மேலும், வரும் நவம்பா் 8-ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இது தமிழகத்தில் பகுதி சந்திர கிரகணமாக சில நிமிடங்களே தென்படவுள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X