புனித நீராடலா? கழிவு நீர் குளியலா?: நீதிமன்றம் கேள்வி

புனித நீராட வருகிறார்களா அல்லது கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியா முழுவதும் இருந்து  புனித நீராட வருகிறார்களா அல்லது கழிவுநீரில் குளிக்க வருகிறார்களா என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் பகுதியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

நகராட்சி நிர்வாகம், நீர்வளத்துறை செயலர், மாவட்ட ஆட்சியர், ராமேஸ்வரம் கோயில் இணை ஆணையர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ராமேஸ்வரம் கடலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க  நடவடிக்கை எடுக்கவில்லை எனவும்  உயர் நீதிமன்றக் கிளை தெரிவித்துள்ளது.

ராமநாதபுரத்தை சேர்ந்த மார்க்கண்டன் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனுத் தாக்கல் செய்தார். ராமேஸ்வரத்தில் பழமையான சிவன் கோயில் அமைந்துள்ளது. தீர்த்தங்கள் கங்கை தீர்த்தத்துக்கு சமமானது. 

மேலும், ராமேஸ்வரத்தில் உள்ளே, வெளியே 64 தீர்த்தங்கள் உள்ளது. அக்னி தீர்த்தம் கோயில் வெளியே உள்ள கடலை குறிக்கும் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com