சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமையக கட்டடம் திறப்பு

சென்னை நந்தனத்தில் 3.90 லட்சம் சதுர அடியில் ரூ.320 கோடியில் கட்டப்பட்ட மெட்ரோ ரயில் நிறுவன தலைமையக கட்டடம் திறக்கப்பட்டடு உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவன தலைமையக கட்டடம் திறப்பு

சென்னை நந்தனத்தில் 3.90 லட்சம் சதுர அடியில் ரூ.320 கோடியில் கட்டப்பட்ட மெட்ரோ ரயில் நிறுவன தலைமையக கட்டடம் திறக்கப்பட்டடு உள்ளது.

மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தனர்.

12 மாடிகள், கண்ணாடி சுவர்களுடன் பிரம்மாண்டமான சென்னை மெட்ரோ ரயில் தலைமையக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 6 மாடிகள் மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கும், 6 மாடிகள் தனியார் மற்றும் அரசு துறைகளுக்கு வாடகைக்கு விடப்பட உள்ளன.

பிரம்மாண்ட கட்டடத்தின் அருகிலேயே மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகளுக்கான குடியிருப்பும் உள்ளது.

பிரம்மாண்ட கட்டடம் முன்பு சுரங்கம் தோண்டும் எந்திரம் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. நுவைவு வாயிலில் கிணறு தத்ரூபமாக அமைக்கப்பட்டு, பெண்கள் நீர் இறைத்து குடங்களில் எடுத்து செல்வது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com