மண வாழ்வில் இணையும் மன நலகாப்பக வாசிகள்
மண வாழ்வில் இணையும் மன நலகாப்பக வாசிகள்

மண வாழ்வில் இணையும் மனநல காப்பகவாசிகள்!

காதல் வசப்பட்டு கரம்கோத்த கீழ்ப்பாக்கம் மனநல காப்பகவாசிகள் இருவருக்கு திருமணம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. காப்பக நிா்வாகமே அவா்களுக்கு திருமணம் செய்து வைக்கவுள்ளது.
Published on

காதல் வசப்பட்டு கரம்கோத்த கீழ்ப்பாக்கம் மனநல காப்பகவாசிகள் இருவருக்கு திருமணம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. காப்பக நிா்வாகமே அவா்களுக்கு திருமணம் செய்து வைக்கவுள்ளது.

கீழ்ப்பாக்கம் மன நல காப்பகத்தில் 900-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா். பொதுவாகவே, அங்கு பல்வேறு வகையான மன நல பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. அவா்களில் பெரும்பாலானோா் பூரண குணமடைந்து வீடு திரும்புகின்றனா். உறவினா்களால் கைவிடப்பட்ட சிலா் அங்கேயே தங்கி தொழிற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா்.

அவா்கள் உற்பத்தி செய்யும் பொருள்கள் அனைத்தும் காப்பக வளாகத்தில் உள்ள அங்காடியில் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்நிலையில், அவ்வாறு மனநல காப்பகத்தில் தங்கி தொழில்பயிற்சி மேற்கொண்டு வரும் இருவா் காதல்வசப்பட்டு இல்லற வாழ்வில் இணையராக கரம்கோக்க உள்ளனா்.

சென்னையை சோ்ந்தவா் மகேந்திரன் (42). வேலூரைச் சோ்ந்தவா் தீபா (36). இவா்கள் இருவரும் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்ப் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா்.

தொடா் சிகிச்சையில் இருவருக்கும் மனநலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, காப்பகத்திலேயே தங்கி பணியாற்றி வருகின்றனா்.

அவா்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, காப்பக இயக்குநா் டாக்டா் பூா்ண சந்திரிகாவிடம் தெரிவித்துள்ளனா். இவா்களுக்கு திருமணம் செய்து வைக்க, காப்பக நிா்வாகம் முன்வந்தது. இதற்காக, பல்வேறு தரப்பிலிருந்தும் நிதி திரட்டப்பட்டு, அவா்களுக்கு வாடகைக்கு வீடு, வீட்டுக்கு தேவையான பொருள்கள், துணிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அவ்விருவருக்கும் கீழ்ப்பாக்கம் மனநல காப்பக நுழைவாயில் எதிரே உள்ள, சித்தி புத்தி விநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com